Tuesday, July 28, 2015

நிலவும் கதிரும் உதிருமோ?

இலை உதிரும். பூவும் பிஞ்சும் உதிரும். சில சமயம் நம்பிக்கைகூட உதிரும் காய்ந்த இலை போல! ஆனால் நிலவு உதிருமோ? நெற்கதிர் உதிரும். ஒளிக்கதிர் உதிருமோ? உதிர்வதை உலகம் தாங்குமோ?

வால்நட்சத்திரம் உதிர்ந்தாலே அபசகுனமாமே! அப்படியென்றால், வாழ்நட்சத்திரம், துருவ நட்சத்திரம், நம்பிக்கை நட்சத்திரம் உதிர்ந்தால்?

அம்புப்படுக்கையிலில்லாமல், இறைவனடி சேர்ந்தார் பிதாமகன்! நோவதா மகிழ்வதா

இந்த தேசத்தின் தந்தை இரண்டாம் முறை மரித்தவலி இன்றுஎழுந்து நிமிர்ந்து நிற்பது ஒன்றே இந்த தேசம் அவருக்குச் செய்யும் சரியான ஈமக்கடன்!

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் எனும் சொல்!

No comments: